
மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது.
இன்று (11) பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்து இவைகள் மீட்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மற்றும் ரீ 56 ரக துப்பாக்கிக்கான 63 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக